இந்தியாவுடன் 70 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்ய கனடா திட்டமிட்டுள்ளது.
கனடவின் வணிக அமைச்சர் மணீந்தர் சித்து, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை 70 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு உயர்த்தும் இலக்கை அறிவித்துள்ளார்.
தற்போது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 30 பில்லியன் டொலர் மதிப்பில் உள்ளது.
மணீந்தர் சித்து, அமெரிக்காவின் மில்வாக்கியில் நடைபெற்ற G20 வணிக அமைச்சர்கள் கூட்டத்தில் பேசியபோது, “இந்தியா-கனடா தலைவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கு 70 பில்லியன் டொலர். இதை அடைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (CEPA) முக்கிய பங்கு வகிக்கும்” எனக் கூறினார்.
கனடா, இந்தியாவில் 100 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ள மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக உள்ளது. விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற அடிக்கட்டு திட்டங்களில் கனேடிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதேசமயம், இந்திய முதலீட்டாளர்களும் கனடாவின் சுரங்க மற்றும் எரிசக்தி துறைகளில் முதலீடு செய்ய வரவேற்கப்படுகிறார்கள்.
மணீந்தர் சித்து, “இந்தியாவின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 7 சதவீதம் வளர்ச்சி அடைகிறது. 2035-க்குள் 70 சதவீதம் கூடுதல் எரிசக்தி தேவைப்படும். கனடா அதனை வழங்க தயாராக உள்ளது. LNG Canada Phase 2 உலகின் இரண்டாவது பெரிய LNG திட்டமாக உருவாகிறது” எனக் குறிப்பிட்டார்.
முக்கியமாக, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், வான்வழி தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆகிய துறைகள் இரு நாடுகளின் கூட்டாண்மையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்திய வணிக அமைச்சர் பியூஷ் கோயல், “CEPA ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும். அடுத்த 90 நாட்கள் இந்தியா-கனடா உறவுக்கு முக்கியமான காலமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் 2026 இறுதிக்குள் CEPA ஒப்பந்தத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளன.
தற்போது இந்தியா-கனடா வர்த்தகம் 8 பில்லியன் டொலர் அளவிற்கு உள்ளது. இதில் இந்தியா 4.67 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது, 3.28 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்கிறது.
இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், இந்தியா-கனடா உறவு புதிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.