துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த Flydubai FZ1073 வானூர்தியின் காக்பிட் தொடர்பான சம்பவம் குறித்து, அதிகாரப்பூர்வ விசாரணையின் மூலம் உண்மையான காரணங்களைத் தெளிவுபடுத்த முடியும் என Flydubai நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Ghaith Al Ghaith தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை (30) முதன்முறையாக இந்த “பாதுகாப்பு சம்பவம்” குறித்து கருத்து தெரிவித்த அவர், வானூர்தியில் என்ன நடந்தது என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளதைத் தாம் அறிந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தலைமையில் முழுமையான அதிகாரப்பூர்வ விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும், அதற்கு Flydubai முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துக்குப் பின்னர் வானூர்தியை பாதுகாப்பாக தரையிறக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் உள்ளிட்ட விமானிகள் மற்றும் வானூர்திப் பணியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய துபாய்–டெல் அவிவ் விமான சேவைகளை Flydubai தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
சம்பவத்திற்கான காரணம் அல்லது சாத்தியமான நோக்கம் குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.