காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 74,229 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 175,188 ஆக அதிகரித்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்‌துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் காயங்கள் காரணமாக உயிரிழந்ததுடன், ஒருவரின் சடலம் மீட்புப் படையினரால் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து மேலும் எழுவர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, குறித்த காலப்பகுதிக்குள் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மட்டும் 1,445 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 5,052 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், இடிபாடுகளுக்குள் இருந்து 835 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தகர்க்கப்பட்ட குடியிருப்புத் தொகுதி ஒன்றின் இடிபாடுகளுக்குள் இருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்ட 105 பேரின் சடலங்களுக்கு காசாவில் கூட்டுப் பிராத்தனைகளுடன் பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap