கைதியின் மரண தண்டனை நிறைவேறாததால் பதவி விலகிய சிறைச்சாலை பிரதானி !

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்டா பைக் (Christa Pike) என்பவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த மாநில சிறைச்சாலை பிரதானி பதவி விலகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டென்னசி மாநில ஆளுநர் பில் லீ (Bill Lee) இந்தத் தன்னார்வப் பதவி விலகல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தண்டனையை நிறைவேற்றும் முயற்சியின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப அல்லது நடைமுறைத் தவறுகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap