மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு - திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்திய 'கொண்ட ரஞ்சி'

துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'கொண்ட ரஞ்சி' என்றழைக்கப்படும் ரஞ்சித் குமார என்ற சந்தேகநபரிடம் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில், தானியங்கி கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.

'மினுவாங்கொட டொக்கா' என்பவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இந்த துப்பாக்கி, கணேமுல்ல, பொல்லத்த பொது மயானத்தில் உள்ள புதை குழியோன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபரினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கியை 'ரத்கம விதுர' என்பவரே தமக்கு வழங்கியதாக 'கொண்ட ரஞ்சி' வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Bootstrap