சூரிய குடும்பத்தின் ஆறாவது கோளான சனி கிரகம் இன்று (4) இரவு பூமிக்கு அருகில் வந்து, வழக்கத்தை விட பிரகாசமாக வானில் காட்சியளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன், பூமி மற்றும் சனி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமையும் ‘எதிர்நிலை நிகழ்வு’ காரணமாக சனி கிரகம் அதிக பிரகாசத்துடன் காணப்படும். இந்த நிகழ்வின்போது சனி கிரகம் பூமியிலிருந்து சுமார் 126 கோடி கிலோமீற்றர் தொலைவில் இருக்கும்.
சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் கிழக்கு வானில் உதயமாகும் சனி கிரகம், இரவு முழுவதும் பிரகாசமாகத் தெரியும். குறிப்பாக நள்ளிரவில் வானின் உச்சிப் பகுதியில் இதனை தெளிவாக அவதானிக்க முடியும்.
சனி கிரகம் மஞ்சள் நிறத்தில் மின்னாமல் நிலையாகத் தெரியும் என்பதால், தொலைநோக்கி இல்லாமலேயே வெறும் கண்ணால் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொலைநோக்கி மூலம் சனியின் அழகிய வளையங்களையும் அதன் மிகப்பெரிய நிலவான டைட்டனையும் அவதானிக்க முடியும்.