ஜெர்மனி சான்சிலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு திடீர் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு வான்வழித் தாக்குதல் சைரன்கள் மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் ரஷியா கிவ் நகரின் பாலத்தைத் தாக்கியது.
ஞாயிற்றுக்கிழமை காலை ரயில் பயணம் வாயிலாக ஜேர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் உக்ரைனிய தலைநகரமான கீவ்விற்கு சென்றடைந்தார்.
ஜேர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸுடன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் கத்தேரினா ரைச்சே மற்றும் நாட்டின் முக்கிய தொழிலதிபர் குழுவினர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
கீவ்வை வந்தடைந்த மெர்ஸ், ரஷ்யாவிற்கு எதிரான போரின் தீவிரத்தன்மை குறித்து எடுத்துரைத்தார்.
அத்துடன் ரஷ்யாவை தடுத்து நிறுத்தாவிட்டால், அதன் போர் கருவிகள் நம்மை நோக்கி எப்போது வேண்டுமானாலும் திரும்பும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஜேர்மன் ஜனாதிபதி மெர்ஸின் இந்த சுற்றுப்பயணம் ரஷ்யாவின் தொடர் வான்வழித் தாக்குதலுக்கு மத்தியில் நடந்துள்ளது.
காலையில் இருந்து உக்ரைனின் முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதலுக்கான சைரன்கள் ஒலிக்கப்பட்டது.
அத்துடன் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலால் தலைநகர் கீவ்வில் நகரின் பாலம் ஒன்று சேதமடைந்து இருப்பதாக மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜேர்மனிய ஊடகங்களின் தகவல் படி, உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜேர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் புதிய ஆதரவு திட்டத்தை அறிவிக்க கூடும் என தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கான ராணுவத்திற்காக கூடுதலாக 1 பில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையை மீட்டெடுக்க 350 மில்லியன் யூரோக்கள்(சுமார் 395 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் எதிரிகளின் ட்ரோன்களை இடைமறித்து அழிக்கும் வகையில் ஜேர்மனியும், உக்ரைனும் இணைந்து புதிய ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை தயாரிப்பதற்கான கூட்டு உத்திகள் திட்டமிடப்பட்டுள்ளது.