பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் தேவையான 50 சதவீத வாக்குகளைப் பெறவில்லை. இதனால் தேர்தல் முடிவு எட்டப்படாமல், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவுக்குச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதல் சுற்றில் தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) மற்றும் செனட்டர் ஃபிளாவியோ போல்சொனாரோ (Flávio Bolsonaro) ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
கணிப்புகளைத் தாண்டி எதிர்க்கட்சி வேட்பாளரான ஃபிளாவியோ போல்சொனாரோ சுமார் 47 சதவீத வாக்குகளையும், ஜனாதிபதி லூலா சுமார் 44.7 சதவீத வாக்குகளையும் பெற்று முன்னிலையில் உள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், சிறிய கட்சிகளின் வாக்குகளை ஈர்க்கவும், நடுநிலை வாக்காளர்களைச் சென்றடையவும் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.