பிரபல எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் 86 வயதில் காலமானார்

பிரபல எழுத்தாளரும் முன்னாள் அரசியல்வாதியுமான ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது 86 வயதில் காலமானார்.

தனது ஐந்து தசாப்த கால எழுத்துப் பயணத்தில், ‘கிளிஃப்டன் க்ரோனிக்கிள்ஸ்’ மற்றும் ‘கேன் அண்ட் ஏபல்’ உள்ளிட்ட படைப்புகள் மூலம் 300 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்துள்ளார்.

தனது நாவல்களின் கதைக்களத்தை பெரும்பாலும் சொந்த ஊரான சொமர்செட்டில் உள்ள வெலிங்டனை மையமாகக் கொண்டு அமைத்திருந்தார்.

கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜெஃப்ரி ஆர்ச்சர், 1987 ஆம் ஆண்டு ‘டெய்லி ஸ்டார்’ நாளிதழுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பொய் கூறி ஏமாற்றியதாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு போலிச் சாட்சியம் அளித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி வடக்கு லண்டனில் பிறந்த ஆர்ச்சர், 1969 ஆம் ஆண்டு லிங்கன்ஷயரில் உள்ள லூத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்த அவர், ஐந்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Bootstrap