ஈட்டி எறிதலில் எனக்கு இவர்தான் குரு : ருமேஷ் பத்திரகே நெகிழ்ச்சி!

ஈட்டி எறிதல் விளையாட்டில் உலகின் முதன்மை நிலை வீரரான இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே , ஜெர்மனியின் ஒலிம்பிக் சாம்பியனான தோமஸ் ரோலரை (Thomas Röhler) தனது வழிகாட்டியாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளப் பதிவொன்றில் கருத்து தெரிவித்துள்ள பத்திரகே, "ஈட்டி எறிதலில் தோமஸ் ரோலரே எனது வழிகாட்டி" எனப் பதிவிட்டுள்ளார்.

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 88.33 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து பத்திரகே ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

ஜெர்மனியின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவரான தோமஸ் ரோலர், 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதுடன், 93.90 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்ததே அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap