என் நிறம்தான் என் அடையாளம் : விமர்சகர்களின் வாயை அடைத்த அட்லீயின் மாஸ் பேச்சு!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள அவர், "ஆமாம், நான் கருப்புதான். இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. என்னுடைய தோற்றத்தையும் நிறத்தையும் வைத்து என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என்னோட பதில்.. என்னோட படம்தான். இது என்னுடைய அடையாளம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கடினமான கால கட்டங்களில் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி தனக்கு வழங்கி வந்த ஆதரவை நன்றியுடன் நினைவுகூர்ந்த அட்லீ, உண்மையான நட்பும் ஆதரவும் ஒருவரின் உருவத்தையோ நிறத்தையோ பார்த்து வருவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடின உழைப்பாலும் திறமையாலும் திரையுலகில் உச்சம் தொட்டுள்ள அட்லீயின் இந்தப் பேச்சுக்கு, சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bootstrap