முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 13ஆம் திகதி நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரிலிய சவிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, ஷிரந்தி ராஜபக்ச நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிங்கப்பூருக்கு சென்றிருந்த அவர், நேற்று நள்ளிரவு நாட்டிற்கு திரும்பியிருந்தார்.
எவ்வாறாயினும், தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலும் தனக்கு முன்பிணை வழங்குமாறு ஷிரந்தி ராஜபக்ச கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.