ஆசியாவுக்கு எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த சவுதி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில், ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் கச்சா எண்ணெயின் விலையை சவுதி அரேபியா அதிரடியாக குறைத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத அளவுக்கு இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான Saudi Aramco, நவம்பர் மாதத்துக்கான Arab Light கச்சா எண்ணெயின் விற்பனை விலையை ஆசிய வாடிக்கையாளர்களுக்கு Oman மற்றும் Dubai எண்ணெய் விலைகளின் சராசரியை விட ஒரு பீப்பாய்க்கு 5 டாலர் குறைவாக நிர்ணயித்துள்ளது.

அக்டோபர் மாத விலையுடன் ஒப்பிடும்போது இது மேலும் 3 டாலர் குறைவு. 2020 ஜூன் மாதத்துக்குப் பிறகு ஆசிய நாடுகளுக்கு வழங்கப்படும் Arab Light எண்ணெய்க்கான மிகப்பெரிய தள்ளுபடி இதுவாகும்.

இந்த விலை குறைப்பு சந்தை ஆய்வாளர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. Reuters நடத்திய ஆய்வில், நவம்பர் மாதத்தில் சவுதி எண்ணெய் விலை 3 டாலர் வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக சவுதி விலையை குறைத்துள்ளது.

Arab Medium மற்றும் Arab Heavy வகை கச்சா எண்ணெய்களின் விலையும் ஆசிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு பீப்பாய்க்கு 5 டாலர் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து செலவு மற்றும் காப்பீட்டு செலவு அதிகரித்துள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கு மொத்த செலவும் அதிகரிக்கிறது.

இந்த சூழலில் விலையை குறைப்பதன் மூலம் ஆசிய சந்தையில் தனது எண்ணெய் விற்பனையை தொடர்ந்து போட்டித்தன்மையுடன் வைத்திருக்க சவுதி முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பு, ரியாத் மற்றும் குரைஸ் பகுதியில் உள்ள Saudi Aramco எண்ணெய் நிலையங்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது. ஆனால் இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தது.

சவுதி எண்ணெய் விலையை குறைத்திருப்பது இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஓரளவு நிம்மதியை அளிக்கலாம். இந்தியா தனது எண்ணெய் தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி செய்வதால், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவின் இறக்குமதி செலவையும் பாதிக்கும்.

சவுதியிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் கிடைத்தால், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு செலவு குறைய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் மற்றும் நாட்டின் பணவீக்கத்திலும் மறைமுக தாக்கம் ஏற்படலாம்.

Bootstrap