ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஏவுகணை தளம் மற்றும் சாதா மலைப்பகுதியில் அமைந்துள்ள ஏவுகணை சேமிப்பு கிடங்கு மீது சவூதி தலைமையிலான கூட்டணி தாக்குதல் நடத்தியுள்ளதாக சவூதி உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையம், அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட பகுதிகளை ஹூதிகள் தாக்கியதாக அறிவித்துள்ளனர்.
மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரியாத் நகரில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.