2026ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சன், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம் மற்றும் வானியற்பியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை கண்டுபிடித்தமைக்காக அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படவுள்ளது.
அண்டார்டிக் பனிக்கட்டியின் பிரமாண்டமான தொகுதியைப் பயன்படுத்தி, அறிவியலால் கண்டறிவதற்கு மிகவும் கடினமான துகள்களைக் கண்டறிந்து பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்கான புதிய வழியை உருவாக்கியமைக்காக பிரான்சிஸ் ஹால்சனுக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.