இரண்டு தலைகள், நான்கு கண்களுடன் அரிய பாம்பு மீட்பு

இந்தியாவின் குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டத்தில் இரண்டு தலைகள் மற்றும் நான்கு கண்களுடன் காணப்பட்ட அரிய வகை பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தன்பூர் தாலுகாவின் அகஸ்வானி கிராமத்தில் உள்ள வயல் ஒன்றில் சுமார் 6 அங்குல நீளமுடைய இந்தப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாம்பு விஷமற்ற வுல்ஃப் ஸ்நேக் (Wolf Snake) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரண்டு தலைகளுடன் ஒரு உடல் காணப்படும் இந்த அரிய வளர்ச்சிக் குறைபாடு ‘பைசெபலி’ (Bicephaly) என அழைக்கப்படுகிறது.

இத்தகைய இருதலைப் பாம்புகள் மிகவும் அரிதானவை என தெரிவிக்கப்படும் நிலையில், குஜராத்தில் இதுபோன்ற பதிவு இதுவே முதன்முறையாக இருக்கலாம் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட பாம்பு சுமார் ஒரு வயதுடையதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், தற்போது அதற்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Bootstrap