எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் உதவ வேண்டும்: மக்களுக்கு திருப்பிச் செய்ய ஆசை": ரசிகர்மன்ற நிர்வாகிகள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசிய விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அப்போது அவர் பேசுகையில், "நான் மக்களால் உருவாக்கப்பட்டவன். எனக்கு பெயர், புகழ், வசதியை கொடுத்தது மக்கள் தான். அதனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் இந்த நிர்வாகிகள் சந்திப்பை ஏதோ புதிதாக நடத்தவில்லை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திப்பை நடத்துகிறோம். நாள்தோறும் நற்பணி செய்வோம், மாதந்தோறும் மாவட்டம் தோறும் நற்பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார்.

எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் நாமும் உதவி செய்ய வேண்டும். முகம் தெரியாத ஒருவருக்கு உதவி செய்யும் போது நாம் இறந்தும் வாழ்வோம்.

இவ்வளவு செய்வதால் நமக்கு நிச்சயமாக பலன் உண்டு. ஆனால், யாருக்காகவும், யாரையும் எதிர்க்கவும் இதை செய்யவில்லை, 'நான் பெரியவன்' என்ற போட்டிக்காகவும் இதை செய்யவில்லை" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Bootstrap