2026 வேதியியல் நோபல் பரிசு இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸ் விஞ்ஞானி ஹென்றி பி. காகன் மற்றும் ஜப்பான் விஞ்ஞானி கென்சோ சோய் ஆகிய இருவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமச்சீரற்ற கரிமத் தொகுப்பில் நேரியல் அல்லாத விளைவுகள் மற்றும் தன்வினையூக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக இவர்களுக்கு இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு வழங்கப்படுவதாக ரொயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் கடந்த சில தினங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசுகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுத்தொகை 1 கோடியே 20 லட்சம் சுவீடன் குரோனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ளன.

Bootstrap