யேமனில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹூதி படைகள் ஏடன் சர்வதேச விமான நிலையத்தை ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக யேமன் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறைந்தது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று ஓடுபாதைக்கு அருகில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கெய்ரோவிலிருந்து ஏடனுக்கு வந்த விமானம் தரையிறங்காமல் சவூதி அரேபியாவின் ஜெத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது.
இதற்கிடையில், ஹூதிகள் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் இராணுவ நிலைகளையும் குறிவைத்ததாக தெரிவித்துள்ளனர்.
சவூதி தலைமையிலான கூட்டுப்படை ரியாத் அருகே வந்த பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்ததாக கூறியுள்ளது.
சமீபத்திய தாக்குதல்கள் யேமனின் செங்கடல் கடற்கரைப் பகுதிகளில் ஹூதிகளுக்கு எதிராக சவூதி ஆதரவு படைகள் மேற்கொள்ளும் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக Reuters தெரிவித்துள்ளது.
இதனால் பிராந்திய பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து குறித்து கவலை அதிகரித்துள்ளது.