மனித நடவடிக்கைகளால் பறவைகளின் குரல் மாறுபாடு: இமயமலை ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல்!

மனிதர்களின் ஆக்கிரமிப்புகள் மற்றும் இறைச்சல் காரணமாக இமயமலைப் பகுதிகளில் வாழும் பறவைகளின் வாழ்க்கை முறை மற்றும் தொடர்பாடல் அமைப்புகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இமயமலைக் காட்டுப்பகுதிகளைச் பூர்விகமாகக் கொண்ட 'மோனல்' (Monal) என்ற பறவையை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பறவை அந்தப் பிராந்தியத்தின் கலாசாரம், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் தனித்துவத்துடன் நெருங்கிய தொடர்புடையதுடன், நேபாளத்தின் தேசியப் பறவையாகவும் போற்றப்படுகிறது.

புல்வெளிகள் மற்றும் இயற்கையான பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமித்து வருவதால், மோனல் பறவைகள் தங்கள் இயற்கையான வாழ்விடங்களை இழந்து வருகின்றன.

கீழ்நிலைப் பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகரித்ததன் காரணமாக, இவை தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மலையின் மிக உயரமான பகுதிகளுக்கு இடம்பெயரக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

மனிதர்களால் ஏற்படும் அதிகளவிலான இறைச்சலையும் மீறித் தங்களுக்கிடையில் தொடர்பை பேணுவதற்காக, இந்தப் பறவைகள் தமது கூச்சல் அல்லது குரலின் தாரதமியத்தை (Pitch) மாற்றி அமைத்து வருகின்றன என்பது ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Bootstrap