கட்டார் அருகே எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் நாட்டின் வடக்கு கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வணிக ரீதியிலான எண்ணெய் கப்பல் (Tanker) மீது தொடர்ச்சியாகப் பல ஏவுகணைகள் தாக்கியதில் கப்பலில் இருந்த ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.

கட்டாரின் மதினாத் அல் ஷமால் (Madinat ash Shamal) பகுதிக்கு வடக்கே சுமார் 51 கடல் மைல் (94 கிலோமீற்றர்) தொலைவில் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கப்பல் மீது ஏவுகணைகள் நேரடியாகத் தாக்கியதில் அதில் பயணித்த ஊழியர்கள் சிலர் காயமடைந்துள்ளதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையை ஒட்டிய கடல் வழிகளில் பயணிக்கும் ஏனைய வணிகக் கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு UKMTO அறிவுறுத்தியுள்ளது.

Bootstrap