கலகொடஅத்தே ஞானசார தேரர் பொது உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில், முப்பீட மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சிறப்புச் சந்திப்பொன்று இன்று (08) பிற்பகல் 1:00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட விதம் குறித்து மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த நிலையிலேயே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.