22 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு: அரேபிய வளைகுடா கிண்ணத்தைக் கைப்பற்றியது சவுதி அரேபியா!

அரேபிய வளைகுடா கிண்ணம் (Arabian Gulf Cup) கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை (UAE) 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சவுதி அரேபிய அணி செம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கிண்ணத்தை சவுதி அரேபியா மீண்டும் தனது கைவசம் ஆக்கியுள்ளது.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், சவுதி அரேபிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி இரு கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

சவுதி அரேபியா அணி இறுதியாக 2004ஆம் ஆண்டு அரேபிய வளைகுடா கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.

தற்போது நீண்ட ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு மீண்டும் இந்தக் கிண்ணத்தை வென்றுள்ளது.

இறுதிப்போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணி பதிலடி கொடுக்க முயன்ற போதிலும், சவுதி அணியின் வலுவான தடுப்பாட்டத்தை மீறி கோல் அடிக்க முடியாமல் போனது.

இந்த வெற்றியின் மூலம் சவுதி அரேபிய அணி தனது வரலாற்றில் 4ஆவது முறையாக அரேபிய வளைகுடா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

Bootstrap