வெளிநாட்டு மாணவர்களின் பயிற்சி வேலைக்கு 70 ஆயிரம் டொலர் கட்டணம் - அமெரிக்கா முன்மொழிவு

அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை நிறைவு செய்த பின்னர் பயிற்சி வேலை (OPT) பெறுவதற்கு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது.

இதன்படி, வெளிநாட்டு மாணவர்களை OPT திட்டத்தில் இணைக்கும் கல்வி நிறுவனங்கள், ஒவ்வொரு புதிய மாணவருக்கும் அரசாங்கத்துக்கு 70 ஆயிரம் அமெரிக்க டொலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

அதேவேளை, OPT அனுமதியை புதுப்பிப்பதற்கு 30 ஆயிரம் அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்மொழிவு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் 60 நாட்களுக்குள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கோரியுள்ளது.

Bootstrap