சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தைக் குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பல வானுார்திச் சேவைகளை ரத்து செய்துள்ளது.
இதன்படி, ரியாத் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 265 இலக்க வானுார்திச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரியாத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்து, இன்று (09) அதிகாலை நாட்டை வந்தடையவிருந்த UL 266 இலக்க வானுார்திச் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.