சங்கர் - கமல் கூட்டணியின் அடுத்த அதிரடி: ‘இந்தியன் 3’ குறித்த மாஸ் அப்டேட் வெளியானது!

இயக்குநர் சங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இரண்டாம் பாகத்தின் தயாரிப்புப் பணிகளின்போதே, இந்த படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், 'இந்தியன் 3' திரைப்படத்திற்கான பின்னணிப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் பதாகை ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் மீண்டும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Bootstrap