8 மாத விண்வெளிப் பயணம் நிறைவு: பசுபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கிய 'க்ரூ-12' விண்வெளி வீரர்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 8 மாதங்களாகப் பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த ‘க்ரூ-12’ (Crew-12) விண்வெளி வீரர்கள் குழுவினர் தங்களது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

நாசாவின் ஜெசிகா மேயர், ஜாக் ஹாத்வே, ஐரோப்பிய விண்வெளி முகமையின் சோஃபி அபெனாட் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் அமைப்பைச் சேர்ந்த அண்ட்ரே பெதியாயெவ் ஆகிய 4 வீரர்கள் அடங்கிய இக்குழுவினர், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபிரீடம்’ (Freedom) டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு வந்தடைந்தனர்.

கலிபோர்னியா கடற்கரைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் பாராசூட்டுகள் உதவியுடன் விண்கலம் பாதுகாப்பாக நீரில் இறங்கியது

Bootstrap