திலின கமகேவை நீதிபதி பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

மொரட்டுவையின் முன்னாள் பிரதம நீதிவானும் மாவட்ட நீதிபதியுமான திலின கமகேவை, நீதிபதி பதவியிலிருந்து நீக்குவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு (JSC) தீர்மானித்துள்ளது.

அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக யானைக் குட்டி ஒன்றைத் தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை திலின கமகே எதிர்கொண்டிருந்தார்.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, அவரைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் நீதிச் சேவை ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது.

Bootstrap