ரஷ்ய டீசல் மீதான பொருளாதாரத் தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தியதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், இதன் விளைவாக ரஷ்யா பெருமளவிலான டீசலை உடனடியாக விநியோகிக்க இணங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகச் சங்கிலியைச் சீரமைக்கும் நோக்கில் இந்தத் தற்காலிகத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.