ஜெயிலர் 2’ இசை வெளியீட்டு விழா நடத்தப்படாதது ஏன்? - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு வழக்கமான முறையில் இசை வெளியீட்டு விழா நடத்தப்படாததற்கான காரணத்தை நடிகர் ரஜினிகாந்த் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்"வழக்கமாகப் பெரிய உள்ளக விளையாட்டு அரங்கங்களில் இசை வெளியீட்டு விழாக்களை நடத்துவோம்.

ஆனால், இதுவே வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதாகக் கருதிய தயாரிப்பு நிறுவனம், விழாவை வித்தியாசமான முறையில் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தது.

மேலும், உள்ளக விளையாட்டு அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் நீண்ட நேரம் நீடிப்பதால், ரசிகர்களும் பார்வையாளர்களும் சோர்வடைந்து விடுகின்றனர்.

இதனால், படக்குழுவினரைத் தனித்தனியாக நேர்காணல் செய்து நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்தனர்.

இருப்பினும், ரசிகர்களை நேரில் சந்திக்க முடியாமல் போனது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

எதிர்காலத்தில் இந்தக் குறையை நிச்சயம் சரிசெய்வேன் எனச் சமீபத்தில் நடைபெற்ற ‘ஜெயிலர் 2’ பட நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Bootstrap