கொழும்பு துறைமுக நகரில் மோதல்: கூரிய ஆயுதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு துறைமுக நகரில் தொழிலாளர் விடுதிக்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், கொழும்பு துறைமுக நகரில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வந்த பண்டாரவளை பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (09) இரவு தொழிலாளர்கள் விடுதிக்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த விருந்தின்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Bootstrap