விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள பொது பெண் கைதிகளுக்கான வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய கண் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சேனக பல்லேதன்ன தெரிவித்துள்ளார்.நேற்று காலை வரை ஷிரந்தி ராஜபக்ச பெண் நோயாளர்களுக்காக நியமிக்கப்பட்ட வார்டில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து நேற்று காலை கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவரை பரிசோதித்ததையடுத்து, அவருக்கு மருந்து பரிந்துரைக்கப்பட்டதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ச நேற்று சிறைச்சாலை வைத்தியர் முன்னிலையிலும் முன்னிலைபடுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக இரத்த மாதிரிகள் உட்பட பல மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
‘சிரிலிய சவிய’ வங்கி கணக்கு நிதி முறைகேடு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கடந்த 7ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.