மன்னர் சார்லசுக்கு எதிராக வழக்கு: இளவரசர் ஆண்ட்ரூவின் நண்பர்கள் வற்புறுத்தல்

இளவரசர் ஆண்ட்ரூவின் நண்பர்கள், மன்னர் சார்லசுக்கு எதிராக வழக்கு தொடருமாறு வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னர் சார்லஸ் இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களைப் பறித்ததால், மன்னருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு ஆண்ட்ரூவை அவரது நண்பர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

இளவரசர் ஆண்ட்ரூ, ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் தொடர்பிலிருந்த விடயம் தொடர்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவரது வீடுகளை பொலிசார் சோதனையிட்டார்கள். அதற்கெதிராக நீதிமன்றத்தில் ஆண்ட்ரூ வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில், ஆண்ட்ரூ வீட்டை பொலிசார் சோதனையிட்டது சட்டவிரோதம் என தீர்ப்பு வெளியாகியுள்ளது.

2010ஆம் ஆண்டுடன் எப்ஸ்டீனுடனான உறவுகளை தான் துண்டித்துவிட்டதாக ஆண்ட்ரூ கூறியிருந்த நிலையில், அது பொய் என்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து மிச்சம் மீதி இருந்த ஆண்ட்ரூவின் பட்டங்களையும் கடந்த ஆண்டு பறித்தார் மன்னர் சார்லஸ்.

ஆனால், பொலிசார் ஆண்ட்ரூ வீட்டை சோதனையிட்டது தொடர்பான வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால் அவருக்கு உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னர் சார்லஸ் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்ததற்கு எதிராகவும் வழக்குத் தொடரலாம் என அவரது நண்பர்கள் வற்புறுத்தியதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

Bootstrap