பிரான்ஸ் மாணவர்களுக்கு ஆதரவாக நின்ற மேயர் மீதும் கண்ணீர் புகை குண்டு வீசிய பொலிசார்

பிரான்சில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் மாணவர்களுக்கு ஆதரவாக மேயர் ஒருவர் களமிறங்கிய காட்சிகள் வைரலாகியுள்ளன.

பிரான்சில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் மாணவர்களுடன் நின்ற மேயர் ஒருவரையும் நோக்கி பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீசிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

பாரீஸில் நடைபெற்ற மாணவர் ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது, Saint-Denis நகர மேயரான Bally Bagayoko மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

மாணவர்களை நோக்கி பொலிசார் வர, பொலிசாருக்கும் மாணவர்களுக்கும் நடுவே நின்ற Bagayoko, அவர்கள் என் பிள்ளைகள் போல என கூறியுள்ளார்.

அத்துடன், அந்த மாணவர்கள் எந்த வன்முறைச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், ஆகவே அவர்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என்றும் பொலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் Bagayoko.

ஆனால், பொலிசார் Bagayokoவையும் சேர்த்து தங்களுக்கு எதிரே நின்ற அனைவர் மீதும் கண்ணீர் புகை குண்டு வீசியுள்ளார்கள்!மாணவர்களுக்கு ஆதரவாக Bagayoko நிற்கும் புகைப்படங்களும் வீடியோவும் வைரலாகிவருகின்றன.

Bootstrap