மாஸ்கோவை குறிவைத்து ஏவப்பட்ட 400க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து உக்ரைன் நேற்றிரவு மிகப்பெரிய அளவில் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின் வழங்கிய தகவலின் படி, மொத்தம் 403 ஆளில்லா உக்ரைனிய ட்ரோன்கள் தலைநகரின் முக்கிய பகுதிகளை குறிவைத்து சீறிப்பாய்ந்தன.
இவற்றில் பெரும்பாலானவற்றை வெகு தொலைவிலேயே ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின.
இருப்பினும் சில மாஸ்கோ நகர எல்லைக்குள் நுழைந்த 25 உக்ரைனிய ட்ரோன்களையும் வான் படை வீரர்கள் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர்.
இரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் முன்னெடுப்பில் பெரிய அளவிலான உயிர் சேதமோ அல்லது முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமோ ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.