சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச வானுார்தி நிலையத்தைக் (King Khalid International Airport) குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 309 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி சிவில் வானுார்தி போக்குவரத்து அதிகாரசபை (GACA) உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஒரே வாரத்தில் குறித்த வானுார்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சவூதி அரேபியா, பங்களாதேஷ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.