350 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடான ஜிபூட்டி கடற்பகுதியில் அக்டோபர் 8 மற்றும் 9ஆம் தேதி இடைப்பட்ட இரவில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 109 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 116 பேர் மாயமாகியுள்ளனர் என சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவிப்பதாக ஐ.நா. முகமை தெரிவித்துள்ளது.

ஜிபூட்டியில் இருந்து ஏமனுக்கு சுமார் 350 பேரை ஏற்றிச் சென்ற அந்தப் படகு, ஜிபூட்டியின் ஓபோக் நகருக்கு வடக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தப்பியவர்கள் கூறியுள்ளனர். உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் அவசரகால உதவிகளை வழங்கி வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Bootstrap