ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: கனடா பிரதமரின் எச்சரிக்கை

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலுக்கு கனேடிய பிரதமர் மார்க் காரேனி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் மார்க் கார்னி வெளியிட்ட பதிவில், பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை எந்தவொரு வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவது என்பதற்கு எந்தவொரு அரசியல் மற்றும் ராணுவ காரணங்களையும் கூறமுடியாது.

அப்பாவி பொதுமக்கள் குறிவைக்கப்படுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றும் என்றும் எச்சரித்துள்ளார்.

அத்துடன் இத்தகைய பொறுப்பற்ற வன்முறை செயல்களை கனடா மிக கடுமையாக சொற்களால் கண்டிக்கிறது என்று பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.

Bootstrap