சவூதி விமான நிலையத் தாக்குதலுக்கு நெதன்யாகு கண்டனம்!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவி மக்களைக் குறிவைத்து அச்சத்தையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்துவதே பயங்கரவாதத்தின் நோக்கம் எனத் தெரிவித்த நெதன்யாகு, இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பிராந்திய மக்களின் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் செழிப்பை உறுதிப்படுத்தும் வலுவான மத்திய கிழக்கை உருவாக்குவதே இஸ்ரேலின் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Bootstrap