சவூதி அரேபியா மீது மீண்டும் ஏவுகணை மற்றும்ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதல்கள் நடத்தப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ரியாத் சர்வதேச வானூர்தி நிலையத்தை தொடர்ந்து மூடி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்று (12) மீண்டும் ஒரு புதிய தாக்குதல் அலையைச் எதிர்கொண்டு வருவதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை ரியாத் வானூர்தி நிலையத்தின் பயணிகள் புறப்படும் முனையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு யேமனில் இயங்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யேமனின் அரச படைகளுக்கு ஆதரவளிக்கும் சவூதி தலைமையிலான (கூட்டணிப் படை), தங்கள் பகுதிக்கு வந்து கொண்டிருக்கும் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), ஒருங்கிணைந்த வளைகுடா பிராந்திய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் உடனடியாகச் செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.