அமெரிக்காவில் பிரபலமான Breaking Bad தொடரில் வால்டர் வைட் ஜூனியர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆர்.ஜே. மிட்டே (RJ Mitte), தனது 34ஆவது வயதில் காலமானார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் பிரவுன்ஸ்வில்லில் அவர் காலமானதாக அவரது நெருங்கிய பிரதிநிதிகளின் உறுதிப்படுத்தல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவத்தில் குற்றச்செயல் இடம்பெற்றதாகச் சந்தேகிக்கப்படவில்லை எனக் காவல்துறை தெரிவித்துள்ளதுடன், விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.