ரியாத் விமான நிலையத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு கடந்த நாட்களில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், விமான நிலையப் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Bootstrap