'மேட் மேக்ஸ்' திரைப்பட பாணியில் சண்டையில் ஈடுபட்ட ஹவுதி மற்றும் சவுதி ஆதரவுப் படைகள்

ஹவுதி மற்றும் சவுதி ஆதரவுப் படைகள் 'மேட் மேக்ஸ்' பாணியிலான பாலைவனச் சண்டையில் ஈடுபட்டுள்ளன.

மேட் மேக்ஸ் திரைப்பட பாணியில் பாலைவனப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி சார்புப் படைகளுடன் சண்டையிட்டு வருவதாகவே சமீபத்திய காணொளிகள் வெளிப்படுத்தியுள்ளன.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், ஈரான் ஆதரவு ஹவுதிகள் சவுதி ஆதரவு ஏமன் படைகளை மணல் பரப்பில் துரத்திச் செல்வதைக் காட்டுவதாக உள்ளது.

இன்னொரு பக்கம், பாலைவனத்தில் ஹவுதி நிலைகளை நோக்கி முன்னேறித் தாக்க முயற்சிக்கும் சவுதி கவச வாகனங்களின் அணிவகுப்பைக் காண முடிகிறது.

இதற்கிடையில், இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட சில கவச வாகனங்கள், வெடிபொருட்களால் தாக்கப்பட்ட பிறகு தலைகீழாகக் கவிழ்கின்றன.

மற்றொரு காணொளியில், ஒரு பிக்கப் டிரக் மணலில் அதிவேகமாகச் செல்வதுடன், அதன் பின்னால் இருந்த வீரர்கள் கடுமையாக மேலும் கீழும் தூக்கி வீசப்படுவதும், அவர்களில் ஒருவர் வாகனத்திற்கு தூக்கி எறியப்பட்டு அவரது தோழர்களால் அங்கேயே விடப்படுகிறார்.

இதனிடையே, சவுதிக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கக் கூடும் என்ற தகவல் வெளியானதன் பின்னர், இஸ்ரேலும் உதவிக்கரம் நீட்டியுள்ளதாகவே தெரிய வந்துள்ளது. ஆனால், இஸ்ரேல் களமிறங்குவதில் சவுதி அரேபியாவுக்கு உடன்பாடில்லை என்றே கூறப்படுகிறது.

சவுதி மக்கள் அதை ஏற்கமாட்டார்கள் என்றே பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் குறிப்பிட்டுள்ளார். வார இறுதியில் சவுதி தலைநகரான ரியாத், ஹவுதிகளின் பல ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, சாத்தியமான ஒரு பதில் தாக்குதலில் அமெரிக்காவும் இணையக்கூடும் என ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹவுதிகள் பல ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்; இதில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

சவுதி தலைநகர் மீது இடைவிடாமல் நடத்தப்பட்ட தாக்குதல்களால், பீதியடைந்த பட்டத்து இளவரசர் சுரங்க அறையில் பதுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

41 வயதான பட்டத்து இளவரசர் கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று பொதுவெளியில் காணப்பட்டார்; அப்போது தேசிய அளவிலான நன்கொடை இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அவர் ரத்ததானம் செய்தார்.

சவுதி தலைமையிலான கூட்டுப் படை வீரர்கள் கவச வாகனங்கள் மூலம் ஹவுதி போராளிகளை நசுக்கிக் கொல்லும் காட்சிகள் வெளியான சில நாட்களிலேயே, இந்த 'மேட் மேக்ஸ்' (Mad Max) பாணியிலான பலைவனத்தில் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

 

Bootstrap