ஈரானில் தனது காதலனுக்கு மரண தண்டனைக்கு நிறைவேற்றப்பட உள்ள சில மணி நேரங்களுக்கு முன்னர் சிறையில் இருந்தபடியே தொலைபேசி வாயிலாக திருமண உறுதிமொழிகளை கூறி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காதலர்களான Alireza Sepahi (25) மற்றும் Mahshad Kashani (22) கலந்து கொண்டனர்.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், அலிரேசா செபாஹிற்கு மரண தண்டனையும், மஹ்ஷத் கஷானிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த ஜூலை மாதம் தூக்கு மேடைக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டதால், செபாஹி மரண தண்டனையிலிருந்து தப்பித்ததோடு கோமா நிலைக்குச் சென்றார்.
ஆனால் பின்னர் சுயநினைவு பெற்றாலும், அதிகாரிகள் அவரது மரண தண்டனையை ஒத்திவைத்தனர்.
நேற்று காலை செபாஹிற்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் இருவரும் தொலைபேசி வாயிலாக திருமண உறுதிமொழிகளை கூறி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வில் இருவரின் தந்தையரும் கலந்து கொண்டனர்.
மனித உரிமை வழக்கறிஞர் அமீர்சலார் தாவூதி, மணமக்களின் தந்தையர்கள் ஆசி வழங்குவதற்காக உறுதிமொழிகளை வாசித்து, திருமணத்தை நடத்த உதவினார்.
கஷானியின் குடும்பத்தினர் பாரம்பரிய வரதட்சணையாக குர்ஆனின் ஒரு பிரதி, ஒரு குங்குமப்பூ கற்கண்டு மற்றும் ஒரே ஒரு சிவப்பு ரோஜா ஆகியவற்றை மட்டுமே வழங்க முடிந்தது.
இந்த நிகழ்வின் போது கஷானி மட்டுமல்லாது சிரைத்துரைத்துறை அதிகாரிகளும் கண் கலங்கியதாக தெரிவித்த தாவூதி, இந்த திருமண முடிவை மாற்ற முடியாது என்று கேஷனியை நான் எச்சரித்த போது, நான் அலிரேசாவை விரும்புகிறேன் என அவரது முடிவில் உறுதியாக இருந்தார்.
ஒரு இளம் பெண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் இருக்க முடிகிறது என்று நான் இப்போதும் வியக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
திருமணம் முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அலிரேசா செபாஹி தூக்கிலிடப்பட்டுள்ளார்.