புகழை விட நாட்டின் நலனே முக்கியம்: ஜேர்மன் சேன்ஸலர்

ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், புகழை விட தனக்கு நாட்டின் நலனே முக்கியம் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய கருத்துக்கணிப்புகள், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸுக்கான ஆதரவு மக்களிடையே கணிசமான அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புகழை விட தனக்கு நாட்டின் நலனே முக்கியம் என்று கூறியுள்ளார் மெர்ஸ்.

நாட்டின் செல்லப்பிள்ளையாகும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ள மெர்ஸ், ’என் நோக்கம், இந்த நாட்டை சரியான பாதையில் நடத்துவதுதான்’ என்று கூறியுள்ளார்.

இளைய தலைமுறைக்கு பயனளிக்கும் வகையில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, கருத்துக்கணிப்புகளில், தனக்கிருக்கும் புகழை தியாகம் செய்யவும் தயார் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.

ஏற்கனவே கடந்த மாதம் நடந்த மாகாணத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் கருத்துக்கணிப்புகளில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, SPD கட்சியைச் சேர்ந்த ஜெர்மனியின் தொழிலாளர் துறை அமைச்சர் தனது ராஜினாமா செய்துள்ளது, அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், மெர்ஸ் இப்படிப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Bootstrap