பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது திடீர் சைபர் தாக்குதல்: கடும் இழப்பு

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் பல சைபர் தாக்குதலுக்கு இலக்கானதில் பெரும் இழப்பு உருவாகியுள்ளது.

பல நாடுகளில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திவரும் ஹேக்கர்கள், பிரான்சில் உணவுப்பொருட்கள் மீதும் கைவைத்துள்ளார்கள்.

ஞாயிற்றுக்கிழமை இரவு துவங்கி, பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

தாவது, ஹேக்கர்கள் குளிர்சாதனப்பெட்டிகள், உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட அறைகளின் வெப்பநிலையை 50 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்த்தியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாகியுள்ளன.

உணவுப்பொருட்கள் கெட்டுப்போனதால், அவற்றை முழுமையாக குப்பையில் வீசவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அத்துடன், வெப்பநிலை அதிகமானதால் சில இடங்களில் தீவிபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஒரே நாளில் பல மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

விடயம் என்னவென்றால், பல்பொருள் அங்காடிகளிலுள்ள இந்த குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் அறைகள், கண்ட்ரோல் பேனல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

அதாவது, குளிர்சாதனப் பெட்டிகளில் திடீரென ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அலுவலகத்தில் இருந்தபடியே அவற்றை இணையம் மூலமாக சரி செய்வதற்காக இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ஹேக்கர்கள், அதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கட்டுப்பாட்டை தங்கள் கைகளில் எடுத்து வெப்பநிலையை உயர்த்திவிட்டார்கள்.

இதற்கிடையில், இந்த தாக்குதலில் பின்னணியில் இருப்பது யார் என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பிரான்ஸ் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Bootstrap