ரஷ்யாவுக்கு எதிராக உளவு பார்த்த ஜப்பானிய பத்திரிகையாளர்: தீவிரமடையும் தூதரக மோதல்

ரஷ்யாவிற்கு எதிராக உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டில் ஜப்பானிய பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே ஏற்கனவே தூதரக உறவு பதற்றம் நிலவி வரும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஜப்பானிய பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின் ஹொக்கைடோ ஷிம்பன்(Hokkaido Shimbun) என்ற நாளிதழின் பத்திரிகையாளரான யுகி இமாய்(Yuki Imai) என்ற நபரே ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின் உளவு அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் யுகி இமாய் ரஷ்யாவின் பாதுகாப்பு ரகசிய தகவல்களை திரட்ட முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சகாலின் நகரில் வசித்து வந்த இவர், ரஷ்யாவை விட்டு வெளியேற திட்டமிட்ட ஒரு நாளுக்கு முன்பு ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது பிறகு தலைநகர் மாஸ்கோவிற்கு கொண்டு வரப்பட்ட யுகி இமாய், டிசம்பர் 12ம் திகதி வரை காவலில் வைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்கு பிறகு அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bootstrap