23 வயது ஈரானியப் பெண்ணுக்கு மரண தண்டனை! காரணம் ஒற்றைப் பதிவு

நபிகள் நாயகத்தை அவமதித்து சமூக ஊடகப் பதிவு வெளியிட்ட 23 வயது ஈரானிய பெண்ணொருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானைச் சேர்ந்த கணக்கியல் மாணவி நஜ்மே அமினி (23), அரசாங்கத்திற்கு எதிராக லட்சக்கணக்கான ஈரானியர்களுடன் இணைந்து போராடினார். அதற்காக ஜனவரி 31ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டார்.

உயர் தலைவரை அவமதித்தது மற்றும் பாதுகாப்புப் படையினருடன் மோதியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அமினி, மஷ்ஹத் நகரில் உள்ள வகிலாபாத் சிறையில் 8 மாதங்கள் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கூறப்படும் சமூக ஊடகப் பதிவு ஒன்றிற்காக நஜ்மே அமினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நபிகள் நாயகத்தை அவமதித்தல் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே மாணவி அமினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஈரானிய மனித உரிமை ஆர்வலர்கள் தற்போது வெளிப்படுத்தியுள்ளனர்.

Bootstrap