ரியாத் நோக்கிய ஏவுகணையை சவூதி வீழ்த்தியது: ஒருவர் காயம்!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரை இலக்கு வைத்து ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை சவூதிஅரேபிய அதிகாரிகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலின் போது வான்வெளியில் அழிக்கப்பட்ட ஏவுகணையின் இடிபாடுகள் வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, எதிர்வரும் நாட்களில் சவூதி அரேபியாவின் வானூர்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கட்டமைப்புகளை இலக்கு வைத்து தமது செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Bootstrap