தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக 'நற்பணி இயக்கமாக' மாற்றியுள்ளார்.
எதிர்கால அரசியல் வருகைக்கான முன்னெடுப்பாக இந்த அமைப்பு ரீதியான மாற்றம் பார்க்கப்படுகிறது.
கோவையில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 'அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம்' என்பது இனி தனுஷ் நற்பணி இயக்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மன்றத்தின் பெயர் மாற்றப்பட்டதுடன், நற்பணி இயக்கத்துக்கான புதிய இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைப்பின் கொடி மற்றும் இலச்சினையில் நடிகர் தனுஷின் படம் இடம்பெற்றுள்ளதுடன், எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்புகளையும் இது அதிகரித்துள்ளது.
சமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் சூழலில், தனுஷின் இந்த அதிரடி மாற்றம் அவரது அரசியல் வருகையை நோக்கிய அடுத்த கட்ட படியாக சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.